இந்தியா

18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சுகந்த நாயக் என்பவர் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநிலம் பேலாசூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறை கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மீண்டும்  சுகந்த நாயக்கிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இதுவரை 50 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள்,  11 அமைச்சர்கள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT