இந்தியா

தில்லியில் 30-ஐ தொட்டது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம்

DIN


தில்லியில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் இன்று (வெள்ளிக்கிழமை) 30.64 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 79,578 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 24,383 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 30.64 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 26,236 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 34 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,70,966 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15,53,388 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 25,305 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 92,273 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,67,374 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,82,39,309 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT