கர்நாடகம்: சாலை விபத்தில் 7 பேர் பலி
கர்நாடக மாநிலத்தின் தவனாகரே மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார்
கர்நாடகத்தின் தவனாகரே மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தவனாகரே மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானதால் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயும் ஒருவர் மருத்துவமனையிலும் பலியானார்கள்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனத்தைச் ஒட்டியதே விபத்திற்கு காரணம் என அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரிஷ்யந்த் தெரிவித்துள்ளார்.
பலியானவர்கள் அனைவரும் மகர சங்கராந்தி விழாவைக் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.