இந்தியா

உபி: ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சமாஜவாதியில் இணைந்தனர்

DIN

உத்தரப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இன்று இணைந்தனர்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது.  தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சில பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில், ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வினய் சாக்யா, பகவதி சாகர் ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தனர்.

இதனால், உத்தரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT