இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை 
இந்தியா

இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை; சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

பல்வேறு சூழல்களுக்கு வசதியான பல்வேறு நிலப்பரப்புகளில் அணியும் வகையில் கணினியின் உதவியோடு இந்த சீருடை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

DIN

இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சூழல்களுக்கு வசதியான, தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் படைப்பிரிவை சேர்ந்த வீர்ர்கள், நேற்று ராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில் புதிய சீருடையில் கலந்து கொண்டனர்.

புதிய சீருடை குறித்து சுவாரஸ்ய தகவல்கள்:

  • ஆலிவ் மற்றும் மண் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடை, எந்தெந்த இடங்களில் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவர், எம்மாதிரியான தட்ப வெப்ப நிலையில் அவர்கள் செயல்படபோகின்றனர் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • பல்வேறு நாட்டு ராணுவ வீரர்களின் சீருடைகளை ஆராய்ந்த பிறகு, தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியோடு இந்த சீருடை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • பல்வேறு சூழல்களுக்கு வசதியான பல்வேறு நிலப்பரப்புகளில் அணியும் வகையில் கணினியின் உதவியோடு இந்த சீருடை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதேுபோல், புதிய சீருடையில் சட்டையை கால்சட்டைக்கு உள்ள மடிக்க வேண்டிய அவசியமில்லை. முன்னதாக, பழைய சீருடையில் சட்டையை மடிக்க வேண்டி இருந்தது. 
  • வெளி சந்தையில் இந்த சீருடைகள் விற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

பழனி சண்முகநதியில் 12 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT