ராகுல் காந்தி 
இந்தியா

தலித் உரிமைகளை ஒட்டிதான் மனித உரிமைகளை பார்க்க வேண்டும்: எவிடன்ஸ் கதிருக்கு ராகுல் காந்தி வாழ்த்து

புகழ்மிக்க வாலன்பெர்க் விருது எவிடன்ஸ் கதிருக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது.

DIN

2022ஆம் ஆண்டுக்கான ரவுல் வாலன்பெர்க் விருதுக்கு, `எவிடன்ஸ் கதிர்’ என்று அழைக்கப்படும் ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். `எவிடன்ஸ்’ அமைப்பின் நிறுவனரான இவர், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.

இவரின் பணியை போற்றும் வகையில், புகழ்மிக்க வாலன்பெர்க் விருது இவருக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, இன அழப்பிலிருந்து யூத மக்களை காக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டவர்  ரவுல் வாலன்பெர்க்.

இவரின் நினைவை போற்றும் வகையில், மனித உரிமைகளுக்காக போராடிவருபவர்களுக்கு ஸ்வீடன் அரசும் ஹங்கேரி நாட்டு நாடாளுமன்றமும் இணைந்து இவரின் பெயரில் விருது வழங்கி கெளரவித்துவருகிறது.

இந்நிலையில், எவிடன்ஸ் கதிருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். ராகுல் காந்தி பேஸ்புக்கில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "சாதனை புரிந்துள்ள ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். தலித் உரிமைகளை ஒட்டித்தான் மனித உரிமைகளை பார்க்க வேண்டும்.

உங்களின் எதிர்கால பணி சிறக்க நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல் அலையே நீ போய்... ருபான்ஷி!

நவ. 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு!

இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

SCROLL FOR NEXT