சோமநாதபுரத்தில் புதிய சுற்றுலா மாளிகை: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் 
இந்தியா

சோமநாதபுரத்தில் புதிய சுற்றுலா மாளிகை: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர்

புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்கு அருகே ரூ.30 கோடிச் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி 21ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

IANS

புது தில்லி: புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்கு அருகே ரூ.30 கோடிச் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி 21ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

சோமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி 21ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவை தொடர்ந்து பிரதமரின் உரை இடம் பெறும்.

சோமநாதர் கோயிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தற்போதுள்ள சுற்றுலா மாளிகை, கோயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் புதிய மாளிகை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதையடுத்து சோமநாதர் கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் இந்த புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரை தெரியும் வகையில் இந்த மாளிகையின் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT