மேற்கு வங்கம்: விரைவு ரயில் விபத்திற்கான விசாரணை அறிக்கை தாக்கல்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டோஹோமோனி அருகே பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே விபத்திற்குக் காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டோஹோமோனி அருகே பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே விபத்திற்குக் காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜன.13 மாலை பிகானீா்- குவாஹாட்டி விரைவு ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப் பாதையைவிட்டு விலகி விபத்திற்குளானது. இதில் சில பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்தன.
பின், அந்த இடத்துக்கு மீட்புப் படையினா் துரிதமாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டாலும் விபத்தில் 9 பேர் பலியானதுடன் 40க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பிகானீா் - குவாஹாட்டி விரைவு ரயிலை சரியாகப் பராமரிக்காததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையேனும் ரயில் எஞ்சினை கவனித்திருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.