உத்பல் பரிக்கர் 
இந்தியா

கோவா தேர்தலில் வாய்ப்பு மறுத்த பாஜக: சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

DIN

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கோவா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் பட்டியலில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பரிக்கரின் பெயர் இடம்பெறவில்லை. மனோகர் பரிக்கர் போட்டியிட்ட பனாஜி தொகுதியில் உத்பல் பரிக்கர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த விவகாரம் அம்மாநில அரசியல் சர்ச்சையைக் கிளப்பியது.

உத்பல் பரிக்கருக்கு பாஜக வாய்ப்பு மறுத்ததையடுத்து ஆம் ஆத்மியில் போட்டியிட கேஜரிவால் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் கோவா மாநிலத்தின் பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக உத்பல் பரிக்கர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

கோவாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT