இந்தியா

காஷ்மீரில் அடுத்த 64 மணி நேரத்துக்கு முழு ஊரடங்கு

காஷ்மீரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

DIN

காஷ்மீரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

இன்று பிற்பகல் 2 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை 
மக்கள் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு வெளியே வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மக்களைக் கண்காணிப்பதற்காக 31,044 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஊழியர்கள் மற்றும் அவசரக்கால தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், மற்ற அனைத்து அத்தியாவசியமற்ற இயக்கமும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகரித்து வரும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறும், மக்கள் வெளியே வருவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வியாழனன்று 5,992 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT