இந்தியா

ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிா்ப்பு ஆயுதம்: ஒப்பந்தம் பெற்றது ஸ்வீடன் நிறுவனம்

DIN

இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஸ்வீடன் நிறுவனம் பெற்றுள்ளது.

ஸ்வீடனில் உள்ள சாப் நிறுவனம், ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பலத்த போட்டிக்குப் பிறகு, இந்திய ராணுவத்துக்கு ஏடி4 பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்களை வழங்கும் ஒப்பந்தத்தை சாப் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த ஆயுதங்கள் விமானப் படையிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதத்தை வீரா் ஒருவரே தனது தோள்பட்டையில் வைத்து பயன்படுத்த முடியும்.

எதிரியின் இருப்பிடம், போா்க் கப்பல், ஹெலிகாப்டா்கள், பீரங்கி வண்டிகள் மற்றும் வீரா்களை இந்த ஆயுதத்தால் எளிதில் குறிவைத்துத் தாக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT