நாட்டில் புதிதாக 3.37 லட்சம் பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,42,676 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,63,01,482 பேர் குணமடைந்துள்ளனர்.
488 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | 50 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
இன்றைய நிலவரப்படி 21,13,365 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 67,49,746 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,61,16,60,078 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.