கேரளத்தில் ஒரேநாளில் 45,136 பேருக்கு கரோனா
கேரளத்தில் ஒரேநாளில் 45,136 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஒரேநாளில் 45,136 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,00,735 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 45,136 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 21,324 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,97,971 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று 132 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 51,739 ஆக உயர்ந்துள்ளது. 2,47,227 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.