முகப்பு
இந்தியா

கொவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசியவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

கொவின் இணையதளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியான நிலையில்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

கொவின் இணையதளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அப்படி எந்தவொரு தனிநபரின் தகவலும் கொவிட் இணையதளத்தில் இருந்து கசியவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் கொவின் செயலியில் இருந்து தரவுகள் கசிந்ததாக வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கம் அளித்துள்ளது. 

அதில், கொவிட் இணையதளத்தில் சேமிக்கப்பட்ட எந்தவொரு தனிநபரின் தகவலும் கசியவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. 

கொவின் இணையதளம் பாதுகாப்பானது என்றும் பயனாளியிடமிருந்து பெறப்பட்ட முழுத் தரவுகளும் கொவின் இணையதளத்தில் பாதுகாப்பாக உள்ளது. 

மேலும் எந்த பயனாளியிடமிருந்தும் முகவரி போன்ற ஆவணங்களையோ அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகளையோ சேகரிக்காததால் கொவின் இணையதளத்தில் இருந்த ஆவணங்கள் கசிவதாக வந்த தகவல் சரியானது அல்ல என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →