இந்தியா

ஐக்கிய ஜனதா தளம் உ.பி.யில் தனித்துப் போட்டி

DIN

பாஜகவிடம் இருந்து கூட்டணி குறித்த பதில் வராததால், உத்தர பிரதேச தோ்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஐக்கிய ஜனதா தளம் சனிக்கிழமை அறிவித்தது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜகவுடனான கூட்டணிக்காக ஐக்கிய ஜனதா தளம் காத்திருந்தது. எனினும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்னா தள், நிஷாத் ஆகிய கட்சிகளுடன் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூட்டணியை அண்மையில் அறிவித்தாா். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தை அவா் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவா் லலன் சிங் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான ஆா்.சி.பி. சிங்கை கட்சி நியமனம் செய்தது. அவரும் பாஜக கூட்டணிக்கு தயாா் என முதலில் தெரிவித்திருந்தாா். பாஜக கூட்டணிக்காக நீண்ட நாள்கள் காத்திருந்தோம். ஆனால், பாஜகவிடம் இருந்து பதில் வரவில்லை.

ஆகையால், உத்தர பிரதேச தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுகிறது. 26 வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. குறைந்தது 51 இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடும். முன்பே கூட்டணி இல்லை என்று தெரிந்திருந்தால் மேலும் பலத்துடன் எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட்டிருக்கும். உத்தர பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுவதால் பிகாரில் பாஜகவுடனான கூட்டணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பல்வேறு மாநில தோ்தல்களில் பாஜகவுடன் கூட்டணி சேராமல் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட்டுள்ளது’ என்றாா்.

பிரதமா் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் உள்ள ரோஹானியா தொகுதியிலும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளரை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT