உச்ச நீதிமன்றம் 
இந்தியா

இஸ்லாமிய தலைவர்களை கைது செய்ய வேண்டும்: வலதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு

மனுவில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, வெறுப்பு பேச்சுகளுக்காக இஸ்லாமியத் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

DIN

ஹரித்வார், தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற மதக் கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே இந்த மனுவை எதிர்த்து இரண்டு வலதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் தங்களை வழக்கில் சேர்க்கக் கோரி இந்த இரு வலதுசாரி அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.

இந்த மனுவில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, வெறுப்பு பேச்சுகளுக்காக இஸ்லாமியத் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். "தர்ம சன்சத் மாநாட்டில் இந்து மதத்தலைவர்களின் பேச்சு என்பது இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாசாரத்தின் மீதான தாக்குதல்களுக்கான பதில்கள் தானே தவிர, அவற்றை வெறுப்பு பேச்சு எனக் குறிப்பிட முடியாது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் முயற்சி தான் இது" என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹரித்துவார் வெறுப்பு பேச்சுக்கு எதிராக பத்திரிக்கையாளர் குர்பான் அலி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள விஷ்ணு குப்தா, "தர்ம சன்சத் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நபர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்து தர்மம் சன்சாத் தொடர்பான விவகாரங்களில் அவர் ஆட்சேபனை எழுப்பக்கூடாது.

ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் வாரிஸ் பதான் உள்ளிட்ட  முஸ்லிம் தலைவர்களை வெறுப்பு பேச்சுக்காகக் கைது செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வலதுசாரி அமைப்பான நீதிக்கான இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவில், "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதால் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும் உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மொத்தம் 25 நிகழ்வுகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 தொடங்கி 19 வரை நடைபெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பலர் பேசினர். குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT