அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

‘ஆம் ஆத்மிக்கு ஆதரவாக விடியோ போடுபவர்களுடன் உணவு அருந்துவேன்’: கேஜரிவால்

ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் விடியோ போடும் தில்லி மக்களுடன் உணவு அருந்துவேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் விடியோ போடும் தில்லி மக்களுடன் உணவு அருந்துவேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.

இதில், பஞ்சாப் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான முதல்வர் வேட்பாளர்களையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று கேஜரிவால் வெளியிட்ட செய்தியில்,

‘கேஜரிவாலுக்கு ஒரு வாய்ப்பு’ என்ற தலைப்பில் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கவுள்ளோம். தில்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்து முடித்த பணிகள் மற்றும் எதிர்வரும் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு தரக் கோரி தில்லி மக்கள் விடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் 50 விடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுடன் இரவு உணவு அருந்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT