இந்தியா

ஊட்டச்சத்துக் குறைபாடு: பாகிஸ்தானில் 36 குழந்தைகள் பலி

பாகிஸ்தானின் தார் மாவட்டத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

DIN

பாகிஸ்தானின் தார் மாவட்டத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக ஹைதராபாத் சுகாதார துணை இயக்குனர் டாக்டர் இர்ஷாத் மேமன் கூறுகையில், 

தார்பார்கர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இளம்வயது திருமணங்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், ஒரு குடும்பத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி மற்றும் பரம்பரை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எடை குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சிந்து மாகாணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததன் விளைவாக பல்வேறு மருத்துவப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் காலநிலை மாற்றங்களும் அவர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கின்றன. 

அதோடு, மகப்பேறுக்கு முந்தைய சிக்கல்கள், அத்துடன் ரத்த சோகை, நிமோனியா, தட்டம்மை மற்றும் சுவாச தொற்று போன்ற நோய்களும் ஏற்படுகின்றது. 

நாட்டின் மிகப்பெரிய இந்து மக்கள் தொகையைக் கொண்ட தார் பகுதியில் குழந்தைகள் இறப்பு என்பது நீண்டகாலப் பிரச்னையாக இருந்து வருகின்றது.

2021ஆம் ஆண்டில், பல்வேறு சிக்கல்கள் மற்றும் நோய்களால் தார் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT