இந்தியா

தில்லியில் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கரோனா

DIN


தில்லியில் புதிதாக 6,028 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57,132 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 6,028 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.55 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 9,127 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18,03,499 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17,35,808 பேர் குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,681 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 42,010 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 85,418 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை மொத்தம் 2,92,74,125 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT