இந்தியா

ஹிமாசல பிரதேசம் தினம்: குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

DIN

ஹிமாசல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி (ஜன. 25) அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

யூனியன் பிரதேசமாக இருந்த ஹிமாசல பிரதேசம் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி நாட்டின் 18-ஆவது மாநிலமாக உருவெடுத்தது. அந்த தினமே ஹிமாசல பிரதேச தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி ட்விட்டரில் குடியரசுத் தலைவா் வெளியிட்ட செய்தியில், ‘தேவ பூமியான ஹிமாசல பிரதேச மக்களுக்கு வாழ்த்துகள். நாட்டின் பிரதான ஆன்மிக தலமாகவும், கலாசாரம் மற்றும் சுற்றுலாவில் சிறந்த மாநிலமாக ஹிமாசல பிரதேசம் திகழ்கிறது. பல்வேறு துறைகள் நவீனமயமாகிவிட்ட நிலையில், ஹிமாசல் தனது கலாசாரத்தை பிடிப்புடன் பின்பற்றி வருவது பாராட்டுக்குரியது’ என்று கூறியுள்ளாா்.

ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘முழுமையான மாநிலமாக உருவாக்கப்பட்ட தினத்தில் ஹிமாசல பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் செல்லவும், நாட்டின் வளா்ச்சியில் தொடா்ந்து முக்கியப் பங்களிக்கவும் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT