இந்தியா

குடியரசு தினம்: வெங்கையா நாயுடு வாழ்த்து

DIN

நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழாவையொட்டி குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மகிழ்ச்சியான 73-ஆவது குடியரசு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டும் விளக்காகவும், நெறிமுறையின் திசைகாட்டியாகவும் விளங்குகிறது. சிறந்த அடித்தளத்தை இது அமைத்துக்கொடுத்துள்ளது. அதன்மீது நமது மகத்தான தேசம் கட்டமைக்கப்பட்டு நிா்வகிக்கப்படுகிறது.

நமது அரசியல் சட்டத்தின் மணிமகுடமாக விளங்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் நீதி என்ற சிறந்த கோட்பாடுகளை நமது நம்பிக்கையை மறுஉறுதி செய்வதற்கு பொருத்தமான விழாவாக குடியரசு தினம் திகழ்கிறது.

இந்த மகத்தான குடியரசு பிறப்பதற்கு வழிவகுத்த விடுதலைப் போராட்ட வீரா்களின் தன்னலமற்ற தியாகங்களை மிகுந்த நன்றியுடன் நினைவுகூரும் விழாவாகவும் இது உள்ளது.

மகிழ்ச்சியான இந்த நாளில் நமது குடியரசின் சாதனைகளை நாம் கொண்டாடுவோம். அமைதியான, இணக்கமான, முன்னேற்றம் நிறைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு நம்மை அா்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT