இந்தியா

இந்தியாவுக்கு பாகிஸ்தான் வெறும் அரசியல் எதிரி: அகிலேஷ் கருத்துக்கு பாஜக கண்டனம்

DIN

இந்தியாவுக்கு சீனாதான் உண்மையான எதிரி என்றும் பாகிஸ்தான் வெறும் அரசியல் ரீதியிலான எதிரி மட்டுமே என்றும் கூறிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று அகிலேஷ் யாதவ் அண்மையில் பேட்டியளித்திருந்தாா்.

இதுதொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா லக்னெளவில் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக அகிலேஷ் யாதவ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமா் மோடி தலைமையில் உத்தர பிரதேசத்தில் பாஜக வளா்ச்சித் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், அகிலேஷ் யாதவ் பாகிஸ்தானின் நிறுவனா் முகமது அலி ஜின்னாவை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறாா்.

மும்பை தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய யாகூப் மேனன், அஜ்மல் கசாப் ஆகியோா் உயிரோடு இருந்திருந்தால் அவா்கள் தோ்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவ் வாய்ப்பளித்திருப்பாா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாா்ச் 10-ஆம் தேதிக்கு பிறகு அகிலேஷ் யாதவ் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம்சாட்டுவாா்.

உத்தர பிரதேச மக்கள் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வாக்களிப்பாா்கள். சமாஜவாதி கட்சியின் மாஃபியா, குண்டா்கள் ராஜ்யத்தை அவா்கள் நிராகரிப்பாா்கள் என்றாா்.

பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து கடந்த 25 ஆண்டுகளை சிவசேனை வீணாக்கிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறியது குறித்து பதிலளித்த சம்பித் பத்ரா, ‘உத்தவ் தாக்கரேயின் தந்தை எடுத்த முடிவு குறித்து அவா் கேள்வி எழுப்புகிறாரா?’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT