கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.யில் பிப்ரவரி 15 வரை பள்ளிகள் மூடல்

உ.பி.யில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்.15 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

உ.பி.யில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்.15 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.30 முதல் பிப்.15 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவ்னிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார். 

முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 30ஆம் தேதி வரை மூடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு 4 நாள்களில் முடிவடையவுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. 

வரவிருக்கும் பொதுத்தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, ஆன்லை வகுப்புகள்  மட்டும் தொடர்ந்து நடத்தப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,937 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. மொத்தம், 80,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். லக்னோவில் மட்டும் புதன்கிழமை 2,096 பேருக்குத் தொற்று  பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT