கரியப்பா மைதானத்தில் பிரதமர் மோடி 
இந்தியா

ஒரு காலத்தில் என்சிசியில் இருந்ததை கருதி பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

"நம் இளம் நாட்டில் இம்மாதிரியான வரலாற்று சிறப்புமிக்க விழா நடைபெற்றுவரும் நேரத்தில் இன்றைய இந்த கொண்டாட்டம் வேறுவிதமான உற்சாகத்தை தருகிறது" என மோடி உரையாட்டினார்.

DIN

தேசிய மாணவர் படை நாட்டுக்கு செய்துவரும் பங்களிப்பை பாராட்டி பேசிய மோடி, எல்லை பகுதிகளில் ஒரு லட்சத்திற்கு மேலான புதிய மாணவர்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய மாணவர் படையில் நான் பெற்ற பயிற்சியும், இங்கு நான் கற்றுக்கொண்ட விஷயங்களும் எனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு பெரும் பலத்தை அளித்துள்ளன. சமீபத்தில், என்சிசி முன்னாள் மாணவர் அட்டையையும் பெற்றிருந்தேன். 

நாடு சுதந்திரம் அடைந்த அமிர்த மஹோத்சவ் விழாவைக் கொண்டாடி வருகிறது. ஒரு இளம் நாடு இப்படி ஒரு வரலாற்று விழாவுக்கு சாட்சியாக மாறும்போது, ​​அதன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உற்சாகம் இருக்கிறது. அது இன்றும் இந்த மண்ணில் தெரிகிறது. இது இந்தியாவின் இளைஞர் சக்தியின் தொலைநோக்கு பார்வையாகும். இது நமது தீர்மானங்களை நிறைவேற்றும்

இன்று, நாடு புதிய தீர்மானங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, ​​நாட்டில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதற்காக, நாட்டில் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் எல்லைப் பகுதிகளில், ஒரு லட்சம், புதிய என்சிசி மாணவர்களை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தேசிய மாணவர் படையின் பேரணி அனைத்து ஆண்டும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT