இந்தியா

பஞ்சாப் தேர்தல்: சிரோமணி அகாலி தளம் தலைவர் வேட்புமனு தாக்கல்

DIN

சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இன்று பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப். 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், வேட்புமனுத் தாக்கலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

அந்தவகையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இன்று ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

அப்போது ஜலாலாபாத் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் போட்டியிடும் மோகன் சிங் பலியன்வாலா குறித்து க்பீர் சிங் பாதல், 'அவர் ஒரு மூத்த தலைவர். அவர் போட்டியிடுவது நல்லதுதான். தேர்தலில் போட்டியிடும் அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT