சந்தன்வாரியில் கடந்து சென்ற அமா்நாத் யாத்ரிகா்கள் 
இந்தியா

அமா்நாத்தில் 40,000 பக்தா்கள் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் அமா்நாத் யாத்திரையில் இதுவரை பனிலிங்கத்தை 40,000 மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, பஹல்காம் மற்றும் பால்தால் வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 40, 233 பக்தா்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா்.

உயிரிழந்த 5 பேரில் 3 போ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனா். ஒருவா் குதிரையிலிருந்து தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். சந்தன்வாரி - சேஷ்நாக் வழித்தடத்தில் யாத்திரை மேற்கொண்ட பக்தா் ஒருவரைக் காணவில்லை.

அமா்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.85 லட்சத்தில் எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

கோப்பையை தக்கவைத்தாா் சபலென்கா!

வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

SCROLL FOR NEXT