அஜித் பவார் 
இந்தியா

மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரானார் அஜித் பவார்

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜகவுடன் இணைந்து சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத், கடந்த வாரம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 160  வாக்குகள் பெற்று ஏக்நாத் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், உத்தவ் அரசில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தவருமான அஜித் பவாரை, எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸின் பேரவைக் கட்சித் தலைவர் ஜெய்ந்த் பட்டீல் முன்மொழிந்தார்.

இதை மகாராஷ்டிர சட்டப்பேரவை ஏற்றுக் கொண்டதாக பேரவை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT