இந்தியா

பாகிஸ்தானில் கனமழை: 6 பேர் பலி

தென்மேற்கு பாகிஸ்தான் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

DIN

தென்மேற்கு பாகிஸ்தான் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையின் படி, தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

திங்கள்கிழமை தொடங்கிய மழையானது செவ்வாய்க் கிழமையும் தொடர்ந்து பெய்து வருவதால் பலுசிஸ்தானில் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. 

ஜூன் மாதத்திலிருந்து, பலுசிஸ்தான் உள்பட பாகிஸ்தான் முழுவதும் பெய்த மழையில் 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளது. 

மேலும், கடந்த வாரம் கனமழையால் பயணிகள் பேருந்து சாலையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT