முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:43 AM
பகிர்:

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தல் தொடா்பான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

சேலத்தைச் சோ்ந்தவா் வேட்புமனு:

முதல் நாளில் 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அவா்களில் சேலத்தைச் சோ்ந்த கே.பத்மராஜன் என்பவரும் ஒருவா் ஆவாா். 5 பேரில் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஜூலை 19-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பதால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பல இடங்களில் நடைபெறும். ஆனால், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்றத்தில் மட்டுமே நடைபெறும்.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனா். ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பும் ஒரேமாதிரியாக இருக்கும். ரகசிய வாக்கெடுப்பு மூலம் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் தங்கள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அரசியல் கட்சிகள் இதுவரை அறிவிக்காத போதிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

புதிய குடியரசு துணைத் தலைவா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பதவியேற்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.