இந்தியா

சுதந்திரப் போராட்ட வீரர் பி.கோபிநாதன் நாயர் காலமானார்

DIN

காந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான பி.கோபிநாதன் நாயர் நேற்று திருவனந்தபுரத்தில் காலமானார்.  அவருக்கு வயது 100.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

நாடு முழுவதும் காந்தியத்தைப் பிரபலப்படுத்தியதில் கோபிநாதன் நாயர் பெரும் பங்கு வகித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த 2016-ல் கோபிநாதன் நாயருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT