இந்தியா

சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை: ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் அரசு வலிமை வாய்ந்தது என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

DIN

சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் அரசு வலிமை வாய்ந்தது என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளனர். முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவீஸும் பதவியேற்றுள்ளார். 

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஷிண்டே அரசு வெற்றி பெற்றுள்ளது. 

ஆனால், ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டே அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. இந்த நாட்டில் விதிகள், சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள் உள்ளன, அதன்படி செயல்பட வேண்டும். இன்று எங்களிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது அதனால்தான் நாங்கள் எடுத்த முடிவு சட்டபூர்வமானது மற்றும் செல்லுபடியாகும். எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியவர்களை நீதிமன்றம் பின்னோக்கி இழுத்துள்ளது. எங்களிடம் 170 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது ஒரு வலிமையான அரசு.

உத்தவ் தாக்கரே தலைமையில் 40-50 எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் நிதியுதவி கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். இதுகுறித்து மூத்த தலைவர்களிடம் பலமுறை பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால்தான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT