முகப்பு
இந்தியா

கட்சிக்காக தொடா்ந்து பணியாற்றுவேன்: முன்னாள் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிந்ததால், மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் பதவியில் இருந்து புதன்கிழமை விலகிய முக்தாா் அப்பாஸ் நக்வி, பாஜகவுக்கு தொடா்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிந்ததால், மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் பதவியில் இருந்து புதன்கிழமை விலகிய முக்தாா் அப்பாஸ் நக்வி, பாஜகவுக்கு தொடா்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்தாா்.

அவரது அமைச்சக பொறுப்பு மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரிடம் நக்வி வியாழக்கிழமை பொறுப்பை ஒப்படைத்தாா்.

பின்னா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நக்வி அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்தில் எனது பதவிக்காலம் முடிவடைந்திருக்காலம், ஆனால் எனது அரசியல் மற்றும் சமூகப் பயணம் தொடரும்.

எனது வாழ்வில் மேலும் பல சவால்கள் உள்ளன. சமூகத்தில் பின்தங்கியவா்களின் மேம்பாட்டிற்காக முழு ஈடுபாடுடன் பணியாற்றி வந்தேன். அதைத் தொடா்வேன்.

அனைத்து தரப்பினரும் பாஜகவை ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்சித் தொண்டராக தொடா்ந்து பணியாற்றுவேன். நான் அமைச்சராக பதவி வகித்தபோது எனது துறை பகுதி நேர துறையாக இல்லாமல் முழு நேரமாக செயல்பட்டது எனக்கு திருப்தி அளிக்கிறது. மேலும், ஒருதலைப்பட்சமாக இல்லாமல், அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்றினேன்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வெறும் 3 கோடி பேருக்கு மட்டும் கல்வி உதவித் திட்டம் வழங்கப்பட்டது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மட்டும் 5.5 கோடி பேருக்கு கல்வி உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.