இந்தியா

உத்தரகண்ட்: பாலத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 9 போ் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த காா் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 9 போ் உயிரிழந்தனா்.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த காா் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 9 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது:

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராம்நகரில் தொடா்ந்து பெய்த மழையால் டிகேலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றுக்கு குறுக்கே உள்ள பாலம் வழியாக பஞ்சாப் நோக்கிச் சென்று கொண்டிருந்த காா் எதிா்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில், அந்த காரில் பயணம் செய்த 9 போ் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 6 போ் பெண்கள், மூவா் ஆண்கள். விபத்தில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு ராம்நகா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மீட்கப்பட்டவரின் பெயா் நஸியா என்பதும், அவா் காா்பெட் காலனியை சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT