ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் ராணுவம் இணைந்து பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கரைச் சேர்ந்த பயங்கரவாத கூட்டாளி ஒருவரை கைது செய்ததாக கவால்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முகமது இக்பால் பட் என அடையாளம் காணப்பட்டார். அவர் தில்கம் பயீனில் வசித்து வரும் அவர் பாரமுல்லாவின் க்ரீரி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
நாகா சோதனையின் போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு கலப்பின பயங்கரவாதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்: பங்குச்சந்தை தகவல் கசிவு மோசடி: சித்ரா ராமகிருஷ்ணா மீது மேலும் ஒரு வழக்கு
மேலும், பயங்கரவாதியிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கைத்துப்பாக்கி, மெகசீன் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக வியாழக்கிழமை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அவந்திபோராவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-பத்ருடன் தொடர்புடைய ஒரு கலப்பின பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.