இந்தியா

பக்ரீத் பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை யொட்டி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

DIN

பக்ரீத் பண்டிகையை யொட்டி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ‘பக்ரீத்‘ நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்.

வழக்கமான உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, தியாகம் மற்றும் இறைவன் மீதான அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.

பகிர்ந்து உண்ணுதல் மற்றும் ஏழைகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை இந்தப் பண்டிகை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன்.

பக்ரீத் பண்டிகையுடன் தொடர்புடைய உன்னத இலட்சியங்கள் நம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி, நாட்டிற்கு வளம் சேர்க்கட்டும்“ .  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT