முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 280 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 4.21 சதவீதமாகப் பதிவானது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,41,015-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,284-ஆக உள்ளது. நகரில் சனிக்கிழமை 6,645 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 433 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பும், இரு இறப்புகளுடன் 2.96 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,469 கரோனா படுக்கைகளில் 131 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தேசிய தலைநகரில் கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,146-இல் இருந்கு 1,942-ஆக சரிந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,553-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 279-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.