இந்தியா

ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்: காவல்துறையினர் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததைக் கண்டு போக்குவரத்து காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். 

DIN

உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததைக் கண்டு போக்குவரத்து காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் வேகமாக சென்ற ஆட்டோவை நேற்று போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் ஆட்டோவில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். 

அப்போது அந்த ஆட்டோவில் இருந்து மொத்தம் 27 பேர் இறங்கியதைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரூ.11,500 அபராதம் விதித்தனர்.

இந்நிகழ்வை அவ்வழியே சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் விடியோ எடுத்து இணையதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஆட்டோவில் 27 பேர் வரை பயணித்த சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT