கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது மக்கள் புரட்சி வெடித்து, கட்டுக்கடங்காத வன்முறை நடப்பதால், அந்நாட்டுக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வரும் தகவல்கள் குறித்து இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி போன்றவற்றை கையாள வசதியாக, அந்நாட்டுக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. அதிமுக அலுவலகத்தில் நுழைந்த சமூக விரோதிகள்: எடப்பாடி பழனிசாமி
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை விரைவில் அமைப்பது என பிரதான எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.