நரேந்திர மோடி 
இந்தியா

மோடி நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சட்டப்பேரவை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி பாட்னா செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாட்னா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்கும் 1,100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில், துணை முதல்வர் அர்கிஷோர் பிரசாத் மற்றும் எரிசக்தி அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

முன்னதாக, கல்வித்துறை, நீர்வளத்துறை, சமூகநலத்துறை அமைச்சர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT