இந்தியா

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு

18 வயது  மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

18 வயது  மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், 

முன்னதாக 60 வயது மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் ஜூலை 15 முதல் 75 நாள்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘போலி’ விடியோ அடிப்படையில் வழக்கு: சா்ச்சைக்கு அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் விளக்கம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

துணை ஆட்சியா்கள் 38 பேருக்கு டிஆா்ஓ-ஆக பதவி உயா்வு

சேலம் எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும்: அன்புமணி தரப்பு வலியுறுத்தல்

புதிதாக 13 அரசுப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு

SCROLL FOR NEXT