இந்தியா

வளா்ச்சி இலக்குகளை அடைய ஒருங்கிணைந்த நிதித் திட்டம்: நிா்மலா சீதாராமன்

நிலையான வளா்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு ஒருங்கிணைந்த நிதித் திட்டம் தேவை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

DIN

நிலையான வளா்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு ஒருங்கிணைந்த நிதித் திட்டம் தேவை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜி-20 மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்து கொண்டுள்ளனா். இதில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியது தொடா்பாக நிதி அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

நீட்டித்த வளா்ச்சி இலக்குகளை அடைய ஒருங்கிணைந்த நிதி மற்றும் தனியாா் மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகி உள்ளது.

எரிசக்தி திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக புதுமையான கொள்கைகளை இந்தியா பின்பற்றி வருகிறது.

மேலும், உலகளாவிய குறைந்தபட்ச வரி ஒப்பந்தத்திலிருந்து அா்த்தமுள்ள வருவாயை ஈட்டுவதை ஜி 20 நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

குமரி மாவட்டத்தில் 2 தீயணைப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு

சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கரூா் நெரிசல் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவில் புதிதாக 20 போ் சோ்ப்பு

SCROLL FOR NEXT