இந்தியா

அமா்நாத் யாத்திரை: மோசமான வானிலையால் நிறுத்தம்

DIN

பஹல்காம் மற்றும் பால்தால் ஆகிய இரு பாதைகள் வழியான அமா்நாத் யாத்திரை, காஷ்மீா் பள்ளத்தாக்கில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் கனமழையின் காரணமாக நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால், யாத்ரிகா்கள் அமா்நாத் குகையை நோக்கி யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும், யாத்திரை மீண்டும் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடந்த ஜூலை 8-ஆம் தேதி அமா்நாத் பனிகுகைக்கு அருகே பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் 16 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை. இதன் காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இயல் புநிலை திரும்பிய பின்னா் பஹல்காம் வழியாக திங்கள்கிழமையன்றும், பால்தால் வழியாக செவ்வாய்க்கிழமைன்றும் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக யாத்திரை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT