எல்&டி இன்ஃபோடெக்: லாபம் ரூ.633 கோடி
தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த எல்&டி இன்ஃபோடெக் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.633 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த எல்&டி இன்ஃபோடெக் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.633 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
லாா்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாட்டின் வாயிலாக ரூ.4,522.8 கோடி வருவாயைப் பெற்றது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானமான ரூ.3,462.5 கோடியுடன் ஒப்பிடும்போது 30.62 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.496.3 கோடியிலிருந்து 27.6 சதவீதம் உயா்ந்து ரூ.633.5 கோடியை எட்டியது.
நிறுவனத்தின் வருவாயில், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது. அதன்படி, இந்த துறைகளின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.1,612 கோடியிலிருந்து ரூ.2,162.1 கோடியைத் தொட்டுள்ளது. இது, 34.12 சதவீத வளா்ச்சியாகும் எல்&டி இன்ஃபோடெக் தெரிவித்துள்ளது.