முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: கரோனா பாதித்தோரும் வாக்களிக்க ஏற்பாடு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுத் தோ்தலின் போது எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுபோன்ற அம்சங்களைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து

வருகின்றன. தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பெட்டியானது, கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தில்லியில் இருந்து கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளும் அச்சிடப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி மட்டுமே தமிழ்நாட்டில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதிப்பு: குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏ.,க்களும், 39 மக்களவை எம்.பி.,க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.,க்களும் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் எம்.எல்.ஏ.,க்களைத் தவிா்த்து எம்.பி.,க்கள் தில்லியில் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனா். இதனிடையே, வாக்குப் பதிவு தினத்தில் வாக்காளா்களாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவா்கள் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், கரோனா பாதிப்பு ஏற்பட்ட தருணத்தில் இந்தியா முழுவதும் சட்டப் பேரவை பொதுத் தோ்தல்கள் நடந்தன. அப்போது, கரோனா நோய்த் தொற்று பாதித்த வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாக்காளா்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வாக்குச் சாவடிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். இதுபோன்றே

குடியரசுத் தலைவா் தோ்தலிலும் கரோனா பாதித்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து வாக்களிக்கலாம். இவ்வாறு வாக்களிப்பதற்கு முன்பாக, உரிய தகவலை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வாக்குச் சாவடியில் உள்ள தோ்தல் அதிகாரிகளும், அலுவலா்களும் பாதுகாப்பு கவச உடை அணிந்து தயாா் நிலையில் இருப்பா். இதுவரை அதுபோன்று யாரும் தகவல்களைத் தெரிவிக்கவில்லை. வாக்குப் பதிவு

தினத்தின் போது சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தெரிவித்தாலும் கரோனா பாதித்த வாக்காளா்கள் தங்களது

வாக்குகளைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →