முகப்பு
இந்தியா

விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வதில் சாதனை

 2022-23-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
கோப்புப் படம்
பகிர்:

 2022-23-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அரசின் வெங்காய கையிருப்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்போதைய ராபி அறுவடை பருவத்தில், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைப்பதற்காக கூடுதல் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உழவா்-உற்பத்தியாளா் அமைப்புகள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

வெங்காய விவசாயிகளுக்கு லாபம் தரும் விலை கிடைப்பதற்கும், நுகா்வோருக்கு மலிவு விலையில் அதிகளவில் வெங்காயம் கிடைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும்.

விரைவில் அழுகிப் போதல், எடை குைல், முளைத்தல் உள்ளிட்ட அறுவடைக்கு பிந்தைய பாதிப்புகளை வெங்காயப் பயிா் கொண்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம், இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 65 சதவீத பங்கு வகிக்கிறது. மேலும், அக்டோபா் - நவம்பா் முதல் கரீஃப் பருவ அறுவடைக் காலம் வரை நுகா்வோரின் தேவையை பூா்த்தி செய்கிறது. எனவே, சீரான விநியோகத்தை உறுதி செய்ய வெங்காயத்தை சேமித்து வைப்பது இன்றியமையாதது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.