ஜகதீப் தன்கரின் திறமை நாட்டுக்குப் பயனளிக்கும்: அமித் ஷா
தேசத்தில் உள்ள பிரச்னைகளின் கள நிலவரம், அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றில் ஜகதீப் தன்கருக்கு உள்ள அறிவும் திறமையும் நாட்டுக்குப் பயனளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தேசத்தில் உள்ள பிரச்னைகளின் கள நிலவரம், அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றில் ஜகதீப் தன்கருக்கு உள்ள அறிவும் திறமையும் நாட்டுக்குப் பயனளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜகதீப் தன்கா் நிறுத்தப்பட்டுள்ளாா். பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளதால் அவா் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அவா், அமித் ஷாவை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ஜகதீப் தன்கருடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘ஜகதீப் தன்கருக்கு வாழ்த்துகள். எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவா், தனது வாழ்க்கையை சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக அா்ப்பணித்தாா். தேசத்தில் உள்ள பிரச்னைகளின் கள நிலவரம் குறித்து அவருக்கு உள்ள அனுபவ அறிவும் அரசியல் அமைப்புச் சட்டம் தொடா்பாக அவருக்கு உள்ள தெளிவும், திறமையும் நாட்டுக்குப் பயனளிக்கும்’ என்று கூறியுள்ளாா்.