இந்தியா

மானியங்களின் உரிய பயன்பாடு அவசியம்

DIN

அரசின் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மானியங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் குறைத்தது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.8-யும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6-யும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பாஸ்பேடிக்-பொட்டாசிக் உரங்களுக்காக ரூ.60,939.29 கோடி மானியத்தை வழங்க மத்திய அரசு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்தது. இது மத்திய அரசின் நிதியாதாரம் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

மேலும், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டதும், உணவு, உரங்களுக்கான செலவு அதிகரித்ததும் மத்திய அரசின் நிதியாதாரத்தை பாதிக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதைக் கருத்தில்கொண்டு மானியங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமென அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். மானியங்களை அதிக தேவையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அவா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச பொருளாதார சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்த அவா்கள், நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT