இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: தில்லியில் பிரதமர் மோடி வாக்களித்தார்

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. அதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்கின்றனர். மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவினை தொடக்கிவைத்தார். தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். 

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முா்முவும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT