கரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக காலதாமதமின்றி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தரவேண்டி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .
எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் இழப்பீடு குறித்த புகார்களை குறைதீர் கமிட்டிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் இதுக்குறித்து கூறியதாவது:
இழப்பீட்டுக்கு தகுதியான நபர்களுக்கு நிச்சயமாக இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் குளறுபடி அல்லது புகார்கள் இருப்பின் குறைதீர் அமைப்பினை மக்கள் நாடலாம். இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுக்கும் கால தாமதமின்றி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளோம். இந்த உத்தரவை மீறும் அரசாங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.