இந்தியா

நூபுர் சர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தானியர் கைது

DIN

நூபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபரைக் கைது செய்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுத் துறை உள்ளிட்ட முக்கிய அமைப்பின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்துமல்கோட் எல்லைப் பகுதியில் ஜூலை 16 இரவு 11 மணியளவில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். ரோந்து குழு, சந்தேகத்தின் அடிப்படையின் இவரை சோதனையிட்டதில், 11 இன்ச் நீள கத்தி, மத புத்தகங்கள், மணல் மூட்டைகள் உள்ளிட்டவை இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இவரின் பெயர் ரிஸ்வான் அஷ்ரப் என்றும், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவியது தெரிய வந்துள்ளது.

நாங்கள் அடுத்தக் கட்ட விசாரணைக்காக உள்ளூர் காவலர்களிடம் இவரை ஒப்படைத்துவிட்டோம். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். புலானய்வுப் பிரிவினருக்கு இதுகுறித்து தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT